இந்தியப் பங்குச்சந்தைகள் அமெரிக்கா -சீனா இடையிலான வணிகப் போரால் கடும் வீழ்ச்சியுடன் நிறைவடைந்தன.
புதன்கிழமை வணிகநேர முடிவில் மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 351புள்ளிகள் சரிந்து 33ஆயிரத்து 19ஆக இருந்தது. தேசியப் பங்குச்சந்தை நிப்டி 116புள்ளிகள் சரிந்து பத்தாயிரத்து 128ஆக இருந்தது.
அமெரிக்காவின் 106பொருட்களுக்கான இறக்குமதி வரியைச் சீனா 25விழுக்காடு உயர்த்தியதே பங்குச்சந்தையின் வீழ்ச்சிக்குக் காரணமாகக் கூறப்படுகிறது. டாட்டா ஸ்டீல், வேதாந்தா லிமிடெட், எஸ் பேங்க், லார்சன் அண்ட் டூப்ரோ ஆகிய நிறுவனங்களின் பங்குமதிப்பு வீழ்ச்சியடைந்தது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.