உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள கடற்படை கமாண்டோ மகள் சுபாங்கி சொரூப் இந்திய கடற்படையின் முதல் பெண் விமான பைலட்டாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் கேரளாவில் உள்ள கண்ணூரில் “எழிமலா நேவல் அகாடமி” பயிற்சி மையத்தில் கடற்படை பயிற்சியை பெற்றார்.
இவர்கள் அனைவரும் பயிற்சி நிறைவுபெற்று வழியனுப்பும் விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் கடற்படை தலைவர் அட்மிரல் சுனில் லான்பா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.
இந்திய கடற்படைக்கு தேர்வாகியுள்ள 4 பெண்களும் 20 வயதுடையவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களில் சுபாங்கி சொரூப் என்பவர் விரைவில் கடற்படையின் கண்காணிப்பு விமானங்களை ஓட்ட இருக்கிறார். அவர் பேசும்போது, ‘பைலட்டாக தேர்வு பெற்றதன் மூலம் எனது கனவு நனவாகி இருக்கிறது’ என்றார்.
கடற்படை செய்தி தொடர்பாளர் கமாண்டர் ஸ்ரீதர் வாரியார் கூறியதாவது:-
சுபாங்கி கடற்படையின் முதல் பெண் பைலட்டாக தேர்வு பெற்றுள்ளார். கடற்படையின் விமான போக்குவரத்து பிரிவில் பெண் அதிகாரிகள் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் விமான போக்குவரத்து கட்டுப்பாடு, தகவல் தொடர்பு மற்றும் ஆயுதங்கள் பிரிவில் பணியாற்றுகிறார்கள்.
தூத்துக்குடி: வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக, தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் விடிய விடிய கனமழை பெய்து வருகிறது.…
திருநெல்வேலி: தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் விடிய விடிய கனமழை பெய்து வருகிறது. அந்த வகையில், நெல்லை மாவட்டத்தில் மிதமான மழை…
சென்னை: தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் விடிய விடிய கனமழை பெய்து வருகிறது. மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை உள்ளிட்ட…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி நிலவிவருவதால் தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என…
சிங்கப்பூர்: உலக செஸ் சாம்பியன்ஷிப் 2024க்கான போட்டிகள் (FIDE) சிங்கப்பூரில் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய கிராண்ட் மாஸ்டர் குகேஷ்…
புதுச்சேரி : இன்று புதுச்சேரியில் பரவலாக பல இடங்களில் மழை பெய்து வருகிறது. நாளை புதுச்சேரி மற்றும் காரைக்கால் மாவட்டங்களில் கனமழைக்கு…