இண்டிகோ விமான நிறுவனம் மூன்று விமானங்களை சேவையிலிருந்து நிறுத்தியது!
இண்டிகோ விமான நிறுவனம் எஞ்சின் கோளாறு காரணமாக A320 ரக விமானங்களில் மூன்றை, சேவையிலிருந்து நிறுத்தி வைத்துள்ளது.
கடந்த 18 மாதங்களில் 69 முறை இண்டிகோ A320 ரக விமானங்களின் எஞ்சின்களில் ஒன்றில் கோளாறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. வெளிநாட்டுக்கான விமான சேவையை இயக்கிவரும் நிலையில் இந்த எஞ்சின் கோளாறு ஏற்பட்டதையடுத்து, ஐரோப்பிய விமானப் போக்குவரத்து பாதுகாப்பு முகமை எச்சரிக்கை விடுத்தது. நடுவானில் எஞ்சின் செயலிழக்க வாய்ப்புள்ளதாகவும் அந்த முகமை கூறியிருந்தது.
இதையடுத்து, A320 ரக விமானங்களில் மூன்றை மட்டும் இண்டிகோ விமான நிறுவனம் சேவையிலிருந்து நிறுத்தி வைத்துள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.