இண்டிகோ நிறுவனம்  ஏர்-இந்தியாவை வாங்கும் முயற்சியில் இருந்து விலகல்…!

Default Image

இண்டிகோ நிறுவனம் ஏர்-இந்தியா நிறுவனத்தை வாங்கும் முயற்சியில் இருந்து விலகிக் கொண்டுள்ளது.

உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் விமானங்களை இயக்கும் ஏர்-இந்தியா நிறுவனத்தை விற்றுவிட மத்திய அரசு முடிவுசெய்தது. ஏர்-இந்தியா மீதான 33 ஆயிரத்து 392 கோடி ரூபாய் கடனையும் சேர்த்தே வாங்குவோர் ஏற்றுக்கொள்ள வேண்டும் என விமானப் போக்குவரத்து துறை அமைச்சகம் அறிவித்தது.

இந்நிலையில் ஏர்-இந்தியாவை வாங்கும் முயற்சியில் இண்டிகோ நிறுவனம் இறங்கியது. ஏர்-இந்தியாவின் வெளிநாட்டு வர்த்தகசெயல்பாடுகளை மட்டும் கையகப்படுத்திக் கொள்ளும் நோக்கத்துடன் இண்டிகோ இந்த முயற்சியில் ஈடுபட்டது. ஆனால் ஏர்-இந்தியா நிறுவனத்தை முழுமையாக கையகப்படுத்திக் கொள்வதாக இருந்தால் மட்டுமே விற்பது என மத்திய அரசு முடிவு செய்தது. இதையடுத்து, ஏர்-இந்தியா நிறுவனத்தை வாங்கும் முயற்சியில் இருந்து இண்டிகோ நிறுவனம் விலகிக் கொண்டுள்ளது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்