மோசடி வழக்கில் சிக்கியுள்ள தொழிலதிபர் விஜய் மல்லையாவை நாடு கடத்தும் பட்சத்தில், அவர் அடைக்கப்பட உள்ள சிறையின் வீடியோ இங்கிலாந்து நீதிமன்றத்தில் இந்தியா சார்பில் சமர்ப்பிக்கப்பட்டது.
வங்கி கடன் மோசடி வழக்கில் தேடப்படும் முக்கிய குற்றவாளியான விஜய் மல்லையா மீதான வழக்கில், அவரை லண்டனிலிருந்து நாடுகடத்தும் பட்சத்தில் மும்பை ஆர்தர் சாலை சிறையில் அடைக்கப்படுவார் என வெஸ்ட்மினிஸ்டர் நீதிமன்றத்தில் சிபிஐ தகவல் தெரிவித்தது இருந்தது. இந்நிலையில் சிறை பாதுகாப்பு குறித்து வீடியோவை தாக்கல் செய்ய கடந்த மாதம் 31ம் தேதி நீதிமன்றம் உத்தரவிட்டது .
இந்த நிலையில் சிபிஐ ஆர்தர் சாலை சிறையை வீடியோ எடுத்தது. அதில் 12ம் எண் அறையில் போதிய சூரிய வெளிச்சம் வருவது காட்டப்பட்டுள்ளது. மேலும் தனியாக கழிவறை, தொலைக்காட்சி பெட்டி,மற்றும் சுத்தமான படுக்கை, தலையணை போன்றவை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.ரூ.9,000 கோடி வங்கிகளில் கடன் பெற்று மோசடி செய்து விட்டு லண்டனில் தலைமறைவாக இருந்தவர் விஜய் மல்லையா என்பது குறிப்பிடத்தக்கது.
DINASUVADU
சென்னை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்பெரியார் குறித்து சர்ச்சையாக பேசியுள்ளது அரசியல் வட்டாரத்தில் புயலை கிளப்பியுள்ளது. பெரியார் குறித்து…
நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட்டு டொனால்ட் டிரம்ப் வெற்றிபெற்ற நிலையில், வரும் ஜனவரி 20-ஆம் தேதி பதவியேற்கவுள்ளார்.…
திருப்பதி : ஆந்திர பிரதேச மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் (ஜனவரி 10) முதல் ஜனவரி 19ஆம் தேதி வரை…
ஈரோடு : காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ்.இளங்கோவன் மறைவுக்கு பிறகு ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து, எந்த…
சென்னை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்பெரியார் குறித்து சர்ச்சையாக பேசியுள்ளது அரசியல் வட்டாரத்தில் புயலை கிளப்பியுள்ளது. சமீபத்தில் கடலூர்…
காஞ்சிபுரம் : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரருமான ரவிச்சந்திரன் அஷ்வின் இன்று…