ஆள்சேர்க்கும் பணியில் தீவிரம் காட்டும் சேவைத் துறை நிறுவனங்கள்..!

Default Image

கடந்த 7 ஆண்டுகளில் இல்லாத வகையில் வேலை வாய்ப்புகள்,இந்தியாவின் சேவைத் துறை மீண்டும் வளர்ச்சிப்பாதையில் பயணிப்பதைத் தொடர்ந்து  உருவாக்கம் அதிகரித்துள்ளது.

அமெரிக்காவிடம் இருந்து அதிகளவில் ஆர்டர்கள் குவிந்துவருவதால், சேவைத் துறையில் ஈடுபட்டிருக்கும் இந்திய நிறுவனங்கள் கடந்த 7 ஆண்டுகளில் இல்லாத வகையில் ஆள் சேர்க்கும் பணியில் ஈடுபட்டுவருகின்றன என ஆய்வு ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளது.

Nikkei India Services Business Activity Index மார்ச் மாதத்திற்கான குறியீட்டை வெளியிட்டுள்ளது. அதில் 50.3 புள்ளிகளை பெற்றிருப்பதன் மூலம் சேவைத் துறை 7 ஆண்டுகளில் இல்லாத வளர்ச்சியை எட்டியிருப்பது தெரியவந்துள்ளது.

சேவைத்துறை மற்றும் உற்பத்தித் துறை ஆகிய இரண்டிலும் அடைந்திருக்கும் வளர்ச்சியே இந்த தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதாக பொருளாதார வல்லுநர் ஆஷ்னா தோதியா குறிப்பிட்டுள்ளார்.

பொருளாதாரத்தை முறைப்படுத்த பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு கடும் முயற்சிகளை மேற்கொண்டதன் பயனாக அதிகளவிலான வேலை வாய்ப்புகள் உருவாகி வருவதன் சமிக்ஞையாக இந்த தரவுகள் அமைந்திருப்பதாகவும், கடந்த 2011ஆம் ஆண்டு ஜூலை மாதத்திற்கு பிறகு சேவை நிறுவனங்கள் ஆட்களை பணியமர்த்தும் பணியை துரிதப்படுத்தி இருப்பதாகவும் பொருளாதார வல்லுநர் ஆஷ்னா தோதியா கூறியுள்ளார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்