ஆளுநர் மாளிகையில் 9 நாட்களாக மேற்கொண்டு வந்த உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டார் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்!
ஆளுநர் மாளிகையில் 9 நாட்களாக மேற்கொண்டு வந்த உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டார் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்.
டெல்லி முதல் மந்திரி கெஜ்ரிவால் தலைமையில், ரேசன் பொருட்களை வீட்டுக்கு விநியோகம் செய்யும் திட்டத்திற்கு ஒப்புதல் வழங்க கோரி துணை நிலை ஆளுநர் அனில் பைஜால் அலுவலகத்தில் கடந்த 13ந்தேதியில் இருந்து தொடர் உண்ணாவிரத போராட்டம் நடந்தது.
அவருடன் டெல்லி துணை முதல் மந்திரி மணீஷ் சிசோடியா மற்றும் சுகாதார துறை மந்திரி சத்யேந்தர் ஜெயின் ஆகியோரும் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.