ஆருஷி பெற்றோருக்கு எதிராக மனு?
உச்சநீதிமன்றம் ஆருஷி கொலை வழக்கில், அவரது பெற்றோர் விடுவிக்கப்பட்டதற்கு எதிரான மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்டுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில், கடந்த 2008 ஆம் ஆண்டு ஆருஷி என்ற இளம்பெண் கொலை செய்யப்பட்டார். இந்தக் கொலையில் தொடர்பிருப்பதாக சந்தேகிக்கப்பட்ட நபரான வீட்டுக் வேலைக்காரர் ஹேம்ராஜ், கொலை நடந்த மறுநாளே ஆருஷி வீட்டு மொட்டை மாடியில் பிணமாக மீட்கப்பட்டார். இந்த வழக்கில் ஆருஷி பெற்றோர் ராஜேஷ் தல்வார் மற்றும் நுபுர் தல்வார் ஆகியோர் குற்றவாளிகள் என தீர்ப்பளிக்கப்பட்டு, பின்னர் வெவ்வேறு நீதிமன்றங்களால் விடுவிக்கப்பட்டனர். தல்வார் தம்பதியின் விடுதலைக்கு எதிராக, கொலையான வீட்டு வேலைக்காரர் ஹேம்ராஜின் மனைவி தாக்கல் செய்த மனுவும், சிபிஐயின் மேல்முறையீட்டு மனுவும் விசாரணைக்கு ஏற்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.