ஆய்வு முடிவில் அதிர்ச்சி தகவல்!இந்தியாவில் சாலை விபத்துகளில் தினமும் 29 குழந்தைகள் உயிரிழப்பு!
சாலை விபத்துகளில் தினமும் சராசரியாக,இந்தியாவில் 29 குழந்தைகள் உயிரிழப்பதாக, ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. உயிரிழக்கும் குழந்தைகளில் பெரும்பாலானவர்கள் பள்ளி குழந்தைகள் என்றும் கண்டறியப்பட்டுள்ளது. அண்மையில் வெளியிடப்பட்ட அரசு ஆய்வு விவரத்தின்படி, 2016ஆம் ஆண்டு, அதிகபட்சமாக ஹரியானாவில் சாலை விபத்தில், குழந்தைகள் 1452 பேர் உயிரிழந்துள்ளனர். உத்தரப்பிரதேச மாநிலத்தில், 1393 குழந்தைகள் விபத்தில் உயிரிழந்துள்ளனர்.
2016 ஆம் ஆண்டில், 4 லட்சத்து 80 ஆயிரத்து, 652 விபத்துக்களில், 86 சதவீதம், தமிழகம் உட்பட 13 மாநிலங்களில் மட்டுமே நிகழ்ந்துள்ளதும் தெரிய வந்துள்ளது. சாலை பாதுகாப்பு வாரம் தற்போது கடைபிடிக்கப்பட்டு வரும் நிலையில், சாலை விபத்துகள் குறித்து கவலை தெரிவித்துள்ள மத்திய அமைச்சர் Nitin Gadkari, வாகன ஓட்டுனர்கள் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.