ஆய்வில் பகீர் தகவல்!வேட்பாளர்கள் தேர்தல் செலவுகள் குறித்து பொய்க்கணக்கு!
தேர்தல் விழிப்புணர்வு குறித்த தன்னார்வ அமைப்பினர், தேர்தல்களில் போட்டியிடும் வேட்பாளர்கள், தாங்கள் செலவு செய்த தொகையைவிட குறைவாகவே கணக்கு காட்டியிருப்பதாக தெரிவித்துள்ளனர்.
சென்னையில் இன்று செய்தியாளர்களுடன் ஏடிஆர் (ADR) என்ற ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம், அறப்போர் இயக்கம் ஆகியவற்றின் நிர்வாகிகள் பேசினர். அப்போது, தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா, புதுச்சேரி, கேரளா, கர்நாடகா மாநிலங்களில் கடந்த சட்டப்பேரவைத் தேர்தல்களில் வேட்பாளர்கள் செய்த செலவினங்கள் குறித்து ஆய்வு செய்ததாக அவர்கள் தெரிவித்தனர். அந்த கணக்கெடுப்பின்படி, கேரளாவில் வேட்பாளர்கள் நிர்ணயிக்கப்பட்ட செலவுத்தொகையில் 70 சதவிகிதம் மட்டுமே செலவு செய்ததாக கணக்கு தாக்கல் செய்துள்ளனர்.
தமிழக வேட்பாளர்கள் நிர்ணயிக்கப்பட்ட தொகையில் 47.80 சதவிகிதம் மட்டுமே செலவு செய்ததாக குறிப்பிட்டுள்ளனர். ஆனால், வேட்பாளர்கள் நிர்ணயிக்கப்பட்ட தொகையைவிட பல மடங்கு செலவு செய்வதுதான் உண்மை என்று ஏடிஆர் மற்றும் அறப்போர் இயக்கத்தினர் கூறியுள்ளனர்.