ஆய்வில் திடுக் தகவல்!தனிநபர் ஒவ்வொருவர் தலைமீதும் இனி ரூ.40,000 கடன்!
இந்தியாவில் கடந்த ஆண்டு நடந்த வன்முறைகளால் கடுமையான பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
பொருளாதாரம் மற்றும் அமைதிக்கான நிறுவனம் சார்பில் 163 நாடுகள், மாகாணங்களில் கடந்த ஆண்டு நடந்த வன்முறை குறித்து ஆய்வு நடத்தப்பட்டு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
2017-ம் ஆண்டு இந்தியாவில் நடந்த வன்முறையால், நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் 9 சதவீதம் இழப்பு ஏற்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது வன்முறை சம்பவங்களால் 80 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக இழப்பு ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் தனிநபர் ஒவ்வொருவர் மீதும் 40 ஆயிரம் ரூபாய் சுமை விழும் என்று அறிக்கையில் பெரிய வந்துள்ளது.
வன்முறைகளின் காரணமாக பொருளாதாரத்தில் மிகவும் மோசமாகச் சிரியா நாடு பாதிக்கப்பட்டுள்ளது. அந்த நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி 68 சதவீதம் வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ளது.
அதே போன்று ஆப்கானிஸ்தானின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 58 சதவீதமும், ஈராக்கின் 51 சதவீதமும் வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ளது. வன்முறையால் மிக குறைந்த பாதிப்பு ஏற்பட்டுள்ள நாடுகள் பட்டியலில் சுவிட்சர்லாந்து முதலிடத்தில் உள்ளது.