ஆய்வில் அதிர்ச்சித் தகவல்…!இந்திய நீர்நிலைகளில் தண்ணீர் முற்றிலும் வற்றிப் போகும் அபாயம்….!
ஆய்வில் , இந்தியாவில் உள்ள அணைகள் உள்ளிட்ட நீர்நிலைகளில் தண்ணீர் முற்றிலுமாக வறண்டு போகும் அபாயம் நெருங்கியுள்ளதாக அதிர்ச்சிகர தகவல் வெளியாகியுள்ளது.நீர்நிலைகளின் தண்ணீர் அளவு உலக அளவில் குறித்த ஆய்வு செயற்கைக்கோள்கள் மூலம் மேற்கொள்ளப்பட்டது.
அதன்படி, சர்வதேச அளவில் 5 லட்சம் அணைகளில் தண்ணீர் அளவு அதிவேகமாக வற்றி வருவது கண்டறியப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள நீர்நிலைகள் முற்றிலும் வறண்டு ‘டே ஜீரோ’ என்ற தண்ணீரே இல்லாத அளவுக்கு பஞ்சம் ஏற்படும் என்றும் தெரியவந்துள்ளது. பருவநிலை மாற்றம், தண்ணீரை சேமிக்கும் அக்கறையற்ற நீர் மேலாண்மை போன்றவையே இதற்குக் காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த செயற்கைக்கோள் புகைப்படங்களும் வெளியிடப்பட்டுள்ளன. உலக அளவில் இந்தப் பட்டியலில் இந்தியாவுக்கு அடுத்தடுத்த இடங்களில் மொராக்கோ, ஈராக், ஸ்பெயின் ஆகிய நாடுகள் உள்ளன.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.