ஆயுர்வேத சிகிச்சைக்காக வெளிநாட்டில் இருந்து கேரளா வந்த இளம் பெண்ணை காணவில்லை!
கேரள மாநிலம் கோவளம் பகுதிக்கு ஆயுர்வேத சிகிச்சைக்காக வெளிநாட்டில் இருந்து வந்த 33 வயது இளம் பெண்ணை காணவில்லை என்று அவருடைய உறவினர்கள் போலீசில் புகார் அளித்துள்ளனர்.
கோவளம் கடற்கரையில் நடைபெறும் ஆயுர்வேத சிகிச்சை, மசாஜ் போன்றவற்றால் ஈர்க்கப்பட்டு ஏராளமான வெளிநாட்டவர் அங்கு வருவது வழக்கம். அதன்படி சிகிச்சைக்காக கடந்த 14ம் தேதி திருவனந்தபுரம் வந்த ஸ்கோரமனி என்ற ஐரிஷ் பெண்ணிடமிருந்து எந்த தகவலும் வராததால் கவலை கொண்ட அவருடைய சகோதரி போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.