ஆயிரம் கோடி இல்ல…..ஐயாயிரம் கோடி இல்ல 55,000 ஆயிரம் கோடி கடனில் சிக்கி தவிக்கும் ஏர் இந்தியா..!!!
ஏர் இந்தியாவின் கடன் சுமையைக் குறைக்க அதன் நிலம் கட்டடம் ஆகியவற்றை விற்க ஒன்பதாயிரம் கோடி ரூபாய் திரட்ட அரசு திட்டமிட்டுள்ளது.
ஏர் இந்தியா நிறுவனம் சுமார் 55ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்குக் கடனில் மூழ்கியுள்ள நிலையில் ஏர் இந்தியா நிறுவனத்தின் நிலம்,கட்டடம் உள்ளிட்ட அவற்றின் சொத்துக்களை விற்று ஒன்பதாயிரம் கோடி ரூபாய் திரட்ட மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் மும்பையில் உள்ள ஏர்லைன்ஸ் ஹவுஸ் கட்டடம் மற்றும் டெல்லியில் வசந்த்விகார் மற்றும் பாபா கரக்சிங் மார்க் ஆகிய இடங்களில் உள்ள அவற்றிக்கு சொந்தமான நிலங்கள் ஆகும்.ஏற்கெனவே ஏர் இந்தியாவின் துணை நிறுவனமாக உள்ள ஏர் இந்தியா மற்றும் ஏர் டிரான்ஸ்போர்ட் சர்வீசஸ் லிமிடெட்டை விற்கக் கடந்த வாரம் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது குறிப்பிடத் தக்கது.