ஆபூர்வ சூரியகிரகணம்…உலக மக்களை கவர்ந்த புகைப்பட கலைஞர் எடுத்த புகைப்படங்கள்

Default Image
  • இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளில் அபூர்வ சூரியகிரகணம் தெரிந்தது.மக்கள் கண்டு ரசித்தனர்.அபூர்வ சூரியகிரகணத்தை புகைப்படக் கலைஞர் ஒருவர் கச்சிதமாக புகைப்படம் எடுத்துள்ளார்.
  • அந்த  புகைப்படம் மக்கள் மத்தியில்  பெரும்  வரவேற்வையும் பாராட்டுக்களையும்  குவித்து வருகிறது.
இந்தியா மற்றும் உலகில் சில நாடுகளில் சூரிய கிரகணம் தெரிந்தது.ஆனால் இது சற்று வித்தியாசமான சூரிய கிரகணம் ஆகும்.சந்திரன் சூரியனினுடைய மைய பகுதியை மறைத்து அதனுடைய வெளிப்புற விளிம்பு பகுதியானது ஒரு நெருப்பு வளையம் போல வட்டமாக தெரிந்தால் அதனை கங்கண சூரிய கிரகணம் என்று கூறுவர்.இதற்கு வளைய சூரிய கிரகணம் என்ற  பெயரும் உண்டு.கடந்த டிச.,26 அன்று அமாவாசை தினம் அந்த தினத்தில் தான்  கிரகணம் ஏற்பட்டது. இந்த சூரிய கிரகணம் ஆனது  முதன் முதலில் சவுதி அரேபியா நாட்டில் தான் தெரிய தொடங்கியது. அங்கு தொடங்கிய கிரகணத்தின் பாதையானது அப்படியே தென் கிழக்கு திசையை நோக்கி அரபிக்கடல் வழியாக நகர்ந்து இந்தியாவில் உள்ள கேரளாவின் வடக்கு பகுதி, கர்நாடகவின் தெற்கு பகுதி, தமிழகத்தின் வழியாக இலங்கை மற்றும் சிங்கப்பூர், இந்தோனேசியா ஆகிய நாடுகளை நோக்கி சென்றது.
Image result for joshua cripps
இந்த நகர்வுகளை எல்லாம்  நன்றாக பார்க்க முடிந்தது. மேலும் சந்திரன் சூரியனை மறைக்கும் நிகழ்வுகளை மக்கள் கண்டு களித்தனர்.அதன் படி தமிழ்நாட்டில் மட்டும் 10 மாவட்டங்களில் இந்த சூரிய கிரணம் தெரிந்தது.தமிழ்நாட்டில்  நீலகிரி மாவட்டத்தில் தான் இந்த சூரிய கிரகணத்தை முதலில் பார்க்க முடிந்தது.
Image
இவ்வாறு ஆபூர்வ சூரியகிரகணம் ஆனது நடைபெற்று கொண்டிருந்த வேளையில் அந்த அரிய  நிகழ்வை தனது புகைப்பட கருவியில் வித்தியாசமான முறையில்  புகைப்படம் எடுக்க புகைப்பட கலைஞரான ஜோஷ்வா கிரிப்ஸ் விரும்பினார்.
Image
அதன்படி புகைப்படம் எடுக்க பல முயற்சிகளை மேற்கொண்டார்.அப்படி ஐக்கிய அரபு அமீரகத்தில் அமைந்துள்ள பாலைவனம் ஒன்றில் சூரிய கிரகணத்தை ஒட்டகத்துடன் சேர்த்து பார்ப்பதற்கு ரம்மியாகவும் கனக் கச்சிதமாக புகைப்படம் எடுத்துள்ளார். அவர் எடுத்த அந்த புகைப்படங்களை தனது பேஸ்புக் பக்கத்தில் ஜோஷ்வா கிரிப்ஸ் பதிவிட்டார். இந்த புகைப்படங்களை எல்லாம் கண்ட சமூகதளவாசிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருவதோடு மட்டுமல்லாமல் இந்த புகைப்படங்கள் எல்லாம் வைரலாக பரவி வருகிறது.மேலும் அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்