உத்திர பிரதேசம் மாநிலத்தில் உள்ள கோரக்பூரை அடுத்து உள்ள ஃபருகாபாத் மாவட்டத்தை சேர்ந்தவர் ரவிக்குமார் ஆவார் .இவருடைய மனைவி காஞ்சன் ஆவார்.இவருக்கு சில நாட்களுக்கு முன்பு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக விகாஸ் காலனியில் உள்ள ஆகாஷ் கங்கா என்ற தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.அங்கு காஞ்சனை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவருக்கு சுக பிரசவம் பார்க்கவேண்டும் என்று கூறியுள்ளனர்.
இதற்கு ரவிக்குமார் ஒப்புக்கொண்டதை தொடர்ந்து பிரவத்திற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.பின்னர் அறுவை சிகிச்சை செய்தாக வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.உடனே அறுவை சிகிச்சை செய்யவேண்டும் என்று மருத்துவர் கூறியுள்ளனர்.
இதன் காரணமாக குழந்தை நல்லபடியாக பிறக்க வேண்டும் என்ற எண்ணத்தில் ரவிக்குமார் ஒப்பு கொண்டுள்ளார்.பின்னர் காஞ்சன் ஆப்பரேசன் தியேட்டருக்கு மாற்றப்பட்டுள்ளார். பின்னர் மருத்துவர்கள் குழந்தை நலமாக பிறந்துள்ளதாக ரவிக்குமாரிடம் கூறியுள்ளனர்.
ஆனால் குழந்தை ஆப்பரேசன் தியேட்டரில் சில மணி நேரம் இருக்க வேண்டும் மனைவியை வேற வார்டுக்கு மாற்றலாம் என்று கூறியுள்ளனர்.இந்நிலையில் ஆப்பரேசன் தியேட்டரில் இருந்து ஊழியர் ஒருவர் கத்திகொண்டே ஓடிவந்துள்ளார்.
இதனை கண்ட குழந்தையின் தந்தை ஓடி சென்று உள்ளே பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார்.அங்கு அவரது குழந்தை கை, முகம் ஆகியவற்றில் காயங்களுடன் ரத்தம் கசிந்த நிலையில் அசைவின்றி தரையில் விழுந்து கிடந்துள்ளது .
பின்னர் அங்கு ஒரு தெரு நாயும் இருந்துள்ளது.பின்னர் பதட்டமாகிய ரவிக்குமார் அங்கிருந்த ஊழியர்களை அழைத்துள்ளார்.பின்னர் சிலர் வந்து நாயை விரட்டி அடித்துள்ளனர்.அதன் பிறகு ரவிக்குமாரை ஆபரேஷன் தியேட்டருக்குள் மருத்துவமனை நிர்வாகம் அனுமதிக்கவில்லை.
பின்னர் உங்கள் குழந்தை இன்னும் பிறக்கவில்லை, சத்தம் போடாதீர்கள் என பொய்யாக கூறி சமாதானப்படுத்தியுள்ளனர்.பின்னர் ரவிக்குமாரிடம் பேசிய மருத்துவமனை நிர்வாகம் இந்த விஷயத்தை வெளியில் கூறாதீர்கள் நாங்கள் பணம் தருகிறோம் என்று கூறியுள்ளனர்.
பின்னர் ஆத்திரம் அடைந்த ரவிக்குமார் மருத்துவமனையில் நடந்த இந்த கொடுமையை வெளிச்சத்திற்கு கொண்டு வரவேண்டும் என்ற எண்ணத்தில் ஃபருகாபாத் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
பின்னர் விசாரணை மேற்கொண்ட காவல்துறை அதிகாரிகள் ஆபரேஷன் தியேட்டர் ஊழியர் ஒருவர் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தியுள்ளனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
டெல்லி : போனை தயாரிக்கும் வளர்ச்சியில் இந்தியா தற்போது அசுரத்தனமான வளர்ச்சியை கண்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏனென்றால். இந்தியாவில் தயாரிக்கப்படும் மொபைல் போன்களை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடர் சமயத்தில் ஓடிசா மாநிலம் பால்சோர் மக்களவை தொகுதி பாஜக எம்பி பிரதாப் சந்திர…
சென்னை : சூர்யாவின் திரைப்பயணத்தில் இயக்குநர் பாலாவுக்கு மிகப்பெரிய பங்கு இருக்கிறது என்றே சொல்லலாம். அதற்கு முக்கியமான காரணமே சூர்யா ஆரம்ப…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மத்திய அமைச்சர் அமித்ஷா பேசுகையில், அம்பேத்கர் பெயரை கூறுவது பேஷனாகிவிட்டது. அம்பேத்கர் பெயரை கூறுவதற்கு…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் நேற்று முன்தினம் மத்திய அமைச்சர் அமித்ஷா மாநிலங்களவையில் பேசுகையில், அம்பேத்கர் குறித்து பேசுவது…
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை, இந்த வார தொடக்கத்தில் இருந்தே சரிந்த வண்ணம் உள்ளது. இன்று சவரனுக்கு ரூ.520…