ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் குடும்ப சொத்து விவரங்கள் வெளியீடு…!!
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை விட அவரது பேரனின் சொத்து மதிப்பு 6 மடங்கு அதிகமாக உள்ளது.
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கடந்த எட்டு ஆண்டுகளாக தானாக முன் வந்து தனது குடும்ப சொத்து விவரங்களை வெளியிட்டு வருகிறார். அதன்படி குடும்பத்தின் சொத்து மதிப்பு விவரத்தை அவரது மகன் நர லோகேஷ் வெளியிட்டுள்ளார்.
அதில் சந்திரபாபு நாயுடு குடும்பத்தின் மொத்த சொத்து மதிப்பு 81 கோடியே 63 லட்ச ரூபாயாக உள்ளது. இது கடந்த ஆண்டை காட்டிலும் 12 கோடியே 5 லட்ச ரூபாய் அதிகமாகும். இதில் சந்திரபாபு நாயுடுவின் மனைவி, மகனின் சொத்துக்கள் கணிசமான கோடிகள் அதிகரித்துள்ளது.
சந்திரபாபு நாயுடுவின் 3 வயது பேரனும் நர லோகேஷின் மகனுமான தீவன்ஷின் சொத்து மட்டும் 18 கோடியே 71 லட்ச ரூபாயாக உள்ளது. இது சந்திரபாபு நாயுடுவின் சொத்து மதிப்பை விட 6 மடங்கு அதிகமாகும். இதனை எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.
DINASUVADU.COM