ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு பிறந்தநாளில் உண்ணாவிரதம்!வழியில்லாமல் பிறந்தநாள் வாழ்த்து கூறிய பிரதமர் நரேந்திர மோடி!
பிரதமர் நரேந்திர மோடி , ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து கோரி உண்ணாவிரதம் இருந்த அம்மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து கோரி அம்மாநிலத்தில் தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி கடந்த சில நாட்களுக்கு முன் நடைபெற்ற முழு அடைப்புப் போராட்டத்தில் தெலுங்கு தேசம் கட்சி பங்கேற்காத நிலையில், ஒருநாள் உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொள்ளப்போவதாக அறிவித்த சந்திரபாபு நாயுடு அவரது பிறந்தநாளான வெள்ளிக்கிழமை காலை முதல் 12 மணி நேர உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டார்.
இதற்கு மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி உள்ளிட்டோர் ஆதரவு தெரிவித்தனர். இதனிடையே, பிரதமர் மோடி டிவிட்டரில் சந்திரபாபு நாயுடு காருவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்றும், அவர் நீண்ட நாட்கள் ஆரோக்யத்தோடு வாழ வேண்டும் என வேண்டிக் கொள்வதாகத் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.