ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வலியுறுத்தி இன்று எதிர்க்கட்சியினரின் முழு அடைப்பு போராட்டம்…!

Default Image

இன்று ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்க மத்திய அரசை வலியுறுத்தி  முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.

ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து கோரி, எஸ்.ஆர். காங்கிரஸ், காங்கிரஸ் மற்றும் இடதுசாரிக் கட்சிகள் ஆகிய கட்சிகள் அடங்கிய “பிரத்யேக ஹோடா சாதனா சமிதி” என்ற அமைப்பு இன்று முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தது. இந்த போராட்டத்தில், ஆளும் தெலுங்குதேசம் கட்சி பங்கேற்கவில்லை.

எதிர்க்கட்சிகளின் போராட்டம் காரணமாக, விசாகப்பட்டினத்தில் பேருந்துகள் எதுவும் இயக்கப்படவில்லை. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நகரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இடதுசாரிக் கட்சியினர் சாலைகளை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விஜயவாடாவில் பேருந்துகள் அனைத்தும் பேருந்து நிலையத்திலேயே நிறுத்திவைக்கப்பட்டிருந்தன. இதனால் பொதுமக்கள் அவதிக்கு ஆளாகினர். அசம்பாவிதங்களை தவிர்க்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்