ஆந்திரா முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, அம்மாநிலத்திற்கு மத்திய அரசின் உதவியை பெற டெல்லிக்கு 29 முறை பயணம் செய்தும் பலனில்லை என்று தெரிவித்துள்ளார்.
ஆந்திர சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, மாநிலப் பிரிவினையால் பாதிக்கப்படுள்ள ஆந்திராவுக்கு ஒதுக்கீடுகள் வழங்கும் விவகாரத்தில் மத்திய அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் செயல்படுவதாகக் குற்றம்சாட்டினார். தெலுங்கு தேசம் பா.ஜ.க. கூட்டணியில் நீடிப்பதால் ஆந்திராவுக்கு எந்தப் பலனும் இல்லை என்ற அவர், மத்திய அமைச்சரவையில் இருந்து தெலுங்கு தேசம் அமைச்சர்கள் திரும்பப் பெறப்படுவார்கள் என்று தெரிவித்தார்.
இந்நிலையில் ஆந்திர அமைச்சரவையில் இருந்து பா.ஜ.க.வைச் சேர்ந்த அமைச்சர்களான காமினேனி ஸ்ரீனிவாஸ் (Kamineni Srinivas), பிடிகொண்டல மாணிக்ய ராவ் (Pydikondala Manikyala Rao) ஆகியோர் விலகியுள்ளனர்.