ஆந்திரா அரசுக்கு சிறப்பு அந்தஸ்து!பிறந்த நாளில் உண்ணாவிரதம் இருந்த ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு!
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, ஆந்திரா அரசுக்கு சிறப்பு அந்தஸ்து தர வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி வந்தார். கூட்டணியில் இவரது கட்சி இருந்த போதும் கோரிக்கை பற்றி எவ்வித பரிசீலனையும் ஏற்கப்படவில்லை. இதனால் பார்லிமென்டிலிலும் ஆந்திர எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டனர்.
இருப்பினும் மத்திய அரசு கண்டு கொள்ளவில்லை. இதையடுத்து கூட்டணியில் இருந்து சந்திரபாபு வெளியேறினார். இது அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் முதல்வர் சந்திரபாபு நாயுடு தனது கட்சியினருடன் விஜயவாடாவில் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளார்.ஆந்திர மாநிலத்தை மத்திய அரசு புறக்கணிப்பதாக கூறி அவர் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.