தனது பதவியை ஆந்திரப்பிரதேச பாஜக மாநில தலைவர் கே.ஹரி பாபு, ராஜினாமா செய்துள்ளார். மூத்த பாஜக தலைவர் மற்றும் விசாகப்பட்டினத்தின் எம்பியுமான கே.ஹரி பாபு மாநில தலைவர் பதவியை ராஜினாமா செய்து, அதற்கான கடிதத்தை பாஜக தேசிய தலைவர் அமித் ஷாவிற்கு அனுப்பி வைத்தார்.
இதேபோல் ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்தும், சிறப்பு நிதித் தொகுப்பும் அளிப்பதாக வாக்குறுதி அளித்த மத்திய அரசு கடந்த 4 ஆண்டுகளாக எதையும் செய்யவில்லை. இதனால், அதிருப்தி அடைந்த சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி எம்.பி.க்கள் பாஜக தலைமையிலான கூட்டணியில் இருந்து வெளியேறினார்கள். மத்திய அமைச்சர் பதவிகளையும் ராஜினாமா செய்து, பாஜக அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவர நோட்டீஸ் அளித்தனர். மேலும், நாடாளுமன்றத்திலும் கடந்த 23 நாட்களாக தெலங்கு தேசம் எம்.பி.க்கள் போராட்டம் நடத்தி அவையை முடக்கினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது..
தற்போது இவர் ராஜினாமா செய்துள்ளது பாஜகவிற்கு கடும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.