ஆந்திராவில் படகு கவிழ்ந்த விபத்தில் 17 பேர் நீந்திக் கரை சேர்ந்த நிலையில், 23 பேர் மாயம்!
படகு கவிழ்ந்த விபத்தில் ஆந்திராவில் கோதாவரி ஆற்றில் மாயமானவர்களை மீட்கும் பணியில் கடற்படையின் நீச்சல் வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.
ஆந்திர மாநிலம் கொண்டமோடலு கோதாவரி ஆற்றில் ராஜமகேந்திரவரம் நோக்கி படகு ஒன்று சென்று கொண்டிருந்தது. படகில் 40க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்த நிலையில், தேவப்பட்டினம் அருகே ஆற்றில் படகு திடீரெனக் கவிழ்ந்தது. அதில் 17 பேர் நீந்திக் கரை சேர்ந்த நிலையில், 23 பேர் மாயமாயினர். அவர்களை தேடும் பணியில் கடற்படையின் நீச்சல் வீரர்கள் ஈடுபட்டனர்.
தேடுதல் பணியில் விமானப்படை ஹெலிகாப்டர்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. படகில் வழக்கத்தை விட கூடுதலாக பயணிகள் இருந்ததாலே விபத்து ஏற்பட்டதாக கூறப்படும் நிலையில், படகு உரிமையாளர் காஜா என்பவரை கைது செய்து போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.