குழந்தை கடத்த வந்ததாக நினைத்து ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் ஒருவர் உயிரிழந்தார். படுகாயமடைந்த 5 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஒரு பெண் உட்பட 6 பேரை குழந்தை கடத்த வந்ததாக கூறி பொதுமக்கள் தாக்கியுள்ளனர். சரமாரியாக நடத்தப்பட்ட தாக்குதலில் நிலை குலைந்து கீழே விழுந்தவர்களையும் விடாது உதைத்தது அந்த இரக்கமற்ற கும்பல்.
போலீஸார் விரைந்து வந்து மூர்க்கமான தாக்குதலை கட்டுக்குள் கொண்டு வந்தனர். எனினும் தாக்குதலில் ஒருவர் உயிரிழந்து விட்டதாகவும், மற்ற 5 பேரும் உயிருக்கு ஆபத்தான காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குழந்தை கடத்துவதாக யார் மீதேனும் சந்தேகம் எழுந்தாலும் கூட காவல்துறையினருக்குத் தான் தகவல் தெரிவிக்க வேண்டுமே தவிர, அவர்களை தாக்குவது சட்டப்படி தண்டனைக்குரிய குற்றம் என போலீஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
டெக்ஸாஸ் : உலகம் முழுவதும் பலரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டு இருந்த மைக் டைசன் மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த யூட்யூபர் ஜேக்பால்…
சென்னை : ஆபரணத் தங்கத்தின் விலை 2 வாரங்களுக்கு பின் நேற்று உயர்ந்த நிலையில், இன்று மீண்டும் குறைந்துள்ளது. அதன்படி,…
சென்னை : கங்குவா திரைப்படம் பெரிய அளவில் வரவேற்பைப் பெற்று மிகப்பெரிய ஹிட் ஆகும் நிலையில் , வெளியான நாளிலிருந்தே…
திருவனந்தபுரம் : கேரளா மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் சபரிமலையில் அமைந்துள்ள ஐயப்பன் கோயில் நேற்று மாலை மண்டல பூஜைக்காக திறக்கப்பட்டது.…
சென்னை : கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் இன்று (நவம்பர் 16) சர்வதேச கருத்தரங்கு ஒன்று நடைபெற உள்ளது. இதில்…
தென்னாபிரிக்கா : இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்காவிற்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி தொடரை…