ஆதர்ஷ் ஹவுஸிங் ஊழல் வழக்கை விசாரிக்க உயர்நீதிமன்றம் தடை…!
போரின் போது வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கு மகாராஷ்டிர மாநிலத்தில் வீடுகள் கட்டித் தரும் திட்டம் அறிவிக்கப்பட்டது. மும்பையில் உள்ள கொலா பா பகுதியில் 31 அடுக்குமாடி வீடுகள் கட்ட, ‘ஆதர்ஷ் ஹவுஸிங் சொசைட்டி’ என்ற ஒன்று அமைக்கப்பட்டது. இதில் பல ஊழல் முறைகேடுகள் நடந்துள்ளதாக புகார் எழுந்தது. முதன் மந்திரி அசோக் சவான் அவருக்கு வேண்டியவர்களுக்கு முறைகேடாக குடியிருப்புகளை ஒதுக்கினார் என்றும் புகார் கூறப்பட்டது. அசோக் சவான் மீது சி.பி.ஐ. குற்ற வழக்கு தொடர மகாராஷ்டிரா மாநில ஆளுநர் வித்யாசாகர் ராவ் அனுமதி அளித்தது அரசியல் உள் நோக்கம் கொண்ட முடிவு என்று மும்பை உயர் நீதிமன்றம் கூறி அந்த அனுமதியை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.