ஆண்டுக்கு 2 கோடி ரூபாய் சம்பளம்….எந்த நிறுவனத்தில் தெரியுமா?
இரண்டு பெரிய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் பல்வேறு பதவிகளில், வேலைக்கு ஆட்களை எடுத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
தொலைத்தொடர்பு நிறுவனங்கள், அனைத்து தளங்களிலும், வேலைக்கு ஆட்களை எடுத்து வருவதாகவும், ஆண்டு வருமானமாக 2 கோடி ரூபாய் வழங்க ஏர்டெல், ஜியோ போன்ற நிறுவனங்கள் தயாராக இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
ஜியோவின் அறிமுகம் காரணமாக கடந்த ஆண்டு கடுமையான நெருக்கடியை தொலைத்தொடர்பு நிறுவனங்கள் சந்தித்தன. இந்நிலையில், அதில் இருந்து மீளத்தொடங்கியுள்ள தொலைத்தொடர்பு நிறுவனங்கள், தங்களை பலபடுத்தி கொள்ள, உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் ஆட்களை வேலைக்கு எடுக்கவும் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளன.
dinasuvadu.com