ஆண்டுக்கு ஒரு லட்சம் ரூபாய் ஓய்வு பெற்ற குடியரசுத் தலைவரின் அலுவலக செலவுக்காக வழங்கப்படும் ! மத்திய அரசு
மத்திய அரசு, ஓய்வு பெற்ற குடியரசுத் தலைவரின் அலுவலக செலவுகளுக்காக ஆண்டுக்கு ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்படுமென கூறியுள்ளது.
இந்த தகவலை தெரிவித்துள்ள மத்திய உள்துறை அமைச்சகத்தின் செய்திக் குறிப்பில், குடியரசுத் தலைவரின் ஓய்வூதிய சட்டம் 1962 மற்றும் குடியரசுத் துணை தலைவரின் ஓய்வூதிய சட்டம் 1999 ஆகியவற்றில் திருத்தம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
மேலும் ஓய்வு பெற்ற குடியரசுத் துணைத் தலைவருக்கு 90 ஆயிரம் ரூபாயும் அலுவலக செலவுகளுக்காக வழங்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மறைந்த குடியரசுத் தலைவரின் மனைவிக்கு செயலாளர், உதவியாளர் அரசு செலவில் நியமிக்கப்படுவார்கள் என்றும், அவர்களது அலுவலக செலவுக்காக ஆண்டு ஒன்றுக்கு 20 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.