ஆண்டுக்காண்டு தெற்கு ரயில்வேயின் வருமானம் அதிகரிப்பு..!
7 ஆயிரத்து 670 கோடி ரூபாய் தெற்கு ரயில்வே, 2017-2018ஆம் நிதியாண்டில்,வருவாய் ஈட்டியிருக்கிறது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டிருக்கும் செய்திக்குறிப்பில், இந்த தொகையானது, 2016-2017ஆம் நிதியாண்டில் கிடைக்கப்பெற்ற வருவாயை விட 2 புள்ளி ஒரு சதவிகிதம் அதிகமாகும் என்றும் கூறப்பட்டிருக்கிறது.
சரக்குகளை திறம்பட கையாளுதல் உள்ளிட்ட காரணிகளால், தெற்கு ரயில்வேயின் வருமானம் ஒவ்வொரு நிதியாண்டிலும் அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும், 2017-2018ஆம் நிதியாண்டில், 158 இடங்களில், ஆளில்லா ரயில்வே கிராசிங்குகள் நீக்கப்பட்டிருப்பதாகவும், தெற்கு ரயில்வே செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருக்கிறது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.