ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்களை குவிப்பதற்காக, இந்திய வீரர்களுக்கு வெளிநாட்டில் பயிற்சி!
ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்களை குவிப்பதற்காக, இந்திய குத்துக் சண்டை வீரர்களுக்கு இத்தாலி மற்றும் அயர்லாந்தில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இந்தோனேசியாவில் ஆகஸ்ட் மாதம் ஆசிய விளையாட்டு போட்டிகள் நடைபெற இருக்கிறது.
இதில் பங்கேற்கும் இந்திய குத்துச்சண்டை வீரர், வீராங்கனைகளுக்கு இத்தாலி மற்றும் அயர்லாந்தில் முன்னணி குத்துச் சண்டையாளர்களுடன் பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன. மேரி கோம், மோனிகா, சர்ஜூபாலா தேவி, சோனியா லேதெர் உள்ளிட்ட வீராங்கனைகள் வெள்ளிக்கிழமை இத்தாலி சென்ற நிலையில், ஆண்கள் குழுவினர் ஞாயிறன்று அயர்லாந்து புறப்பட்டனர்.