கதுவா சிறுமி ஆசிபா பானு குறித்து பேஸ்புக்கில் மனிதத் தன்மையற்ற கருத்தைப் பதிவிட்டிருந்த ஊழியரைக் கோட்டக் மகிந்திரா வங்கி பணியில் இருந்து நீக்கியுள்ளது. ஜம்மு கதுவாவில் 8வயதுச் சிறுமி பலரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுக் கொல்லப்பட்டது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்துக் கேரளத்தின் பலரிவட்டம் கோட்டக் மகிந்திரா வங்கிக் கிளையில் பணியாற்றிய விஷ்ணு என்பவர் தனது பேஸ்புக் பக்கத்தில், அவளைக் கொன்றது நல்லது, இல்லாவிட்டால் இந்தியாவுக்கு எதிரான மனித வெடிகுண்டாக மாறியிருப்பாள் எனப் பதிவிட்டுள்ளார்.
மனிதத் தன்மையற்ற இந்தக் கருத்துக்கு நூற்றுக்கணக்கானோர் எதிர்ப்புத் தெரிவித்திருந்தனர். அவரைப் பணியில் இருந்து நீக்க வேண்டும் என்றும் வங்கி நிர்வாகத்துக்குக் கோரிக்கை விடுத்திருந்தனர். இந்நிலையில் விஷ்ணுவைப் பணியில் இருந்து நீக்கியுள்ளதாகக் கோட்டக் மகிந்திரா வங்கி தனது பேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் (92) காலமானார். மன்மோகன் சிங் மறைவு ஒட்டுமொத்த இந்தியாவிலும் பெரும் சோகத்தை…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார். அவருக்கு வயது 92. நேற்றிரவு உடல்நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில்…
கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…