அவுரங்கஷீப்பை கொல்ல பயங்கரவாதிகள் பேச்சுவார்த்தை நடத்திய வீடியோ வெளியீடு..!

Default Image
சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ள வீடியோவில் இந்திய ராணுவ வீரர் அவுரங்கஷீப்பை கொல்வதற்கு முன்னதாக பயங்கரவாதிகள் பேச்சுவார்த்தை நடத்திய காட்சிகள் வெளியாகியுள்ளது. பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட இந்திய ராணுவ வீரர் அவுரங்கஷீப்பின் சடலம் கடந்த வியாழன் அன்று புல்வாமா பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டது. அவுரங்கஷீப்பிடம் அவருடைய பயங்கரவாத வேட்டை தொடர்பாக பயங்கரவாதிகள் உரையாடியுள்ளனர் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. ராணுவ வீரர் கொலை செய்யப்படுவதற்கு முன்னதாக அவரிடம் இந்த உரையாடலை பயங்கரவாதிகள் நடத்தியிருக்கலாம் என அதிகாரிகள் நம்புகிறார்கள்.
அவுரங்கஷீப் தலை மற்றும் கழுத்துப்பகுதியில் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாதிகள் அவரை கொன்று இருக்கலாம் என நம்பப்படுகிறது.
இவ்விவகாரம் தொடர்பாக அம்மாநில போலீஸ் விசாரித்து வருகிறது, பாதுகாப்பு படைகளும் பயங்கரவாதிகளை வேட்டையாட தேடுதல் பணியை தொடங்கியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்