அறுவை சிகிச்சையின்போது அலட்சியம் : மருத்துவமனை மீது வழக்குப்பதிவு..!

Default Image

அறுவை சிகிச்சையின் போது மருத்துவ ஊழியர் ஒருவர் ரத்த வகையை மாற்றி உட்செலுத்திய அலட்சியத்தின் காரணமாக கொலும்பியாஆசியா மருத்துவமனை மீது நோயாளியின் உறவினர்கள் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இது குறித்து கணவர் அபிஜித் சஹா கூறுகையில், கடும் வயிற்று வலி காரணமாக எனது மனைவி பைசாக்கி சஹாவை கொல்கத்தாவில் உள்ள கொலும்பியாஆசியா மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றேன். கருமுட்டைக் குழாயில் கசிவு ஏற்பட்டதன் காரணமாக தான் அவருக்கு வயிற்று வலி ஏற்பட்டது. ஆகவே அவருக்கு உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் என்னிடம் கூறினர். இதனையடுத்து கடந்த ஜூன் மாதம் 5ம் தேதி எனது மனைவிக்கு அறுவை சிகிச்சை நடைபெற்றது.

அறுவை சிகிச்சைக்கு செல்வதற்கு முன் எனது மனைவி என்னிடம் நன்றாக தான் பேசினார். அறுவை சிகிச்சை முடிந்த பின் மருத்துவர்கள் என்னிடம் வந்து அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடைபெற்றது என்றும், ரத்தம் தேவைப்படுகிறது என்றும் என்னிடம் கூறினார்கள். ஆனால் அறுவை சிகிச்சை செய்து போது A+ ரத்த வகைக்கு பதிலாக வேறு ரத்த வகையை மாற்றி செலுத்தியிருப்பது எனக்கு தெரியவந்தது. பிறகு சிறிது நேரத்தில் எனது மனைவியின் நிலைமை மோசமாக உள்ளது என்றும், அவர் கோமா நிலையில் உள்ளார் என்றும் என்னிடம் கூறினர்.

மேலும் எனது மனைவியின் நுரையீரல் மற்றும் சிறுநீரகங்கள் சேதமடைந்துள்ளன. இதனையறிந்த நான் மருத்துவமனையின் ரசீதுக்கு பணம் செலுத்த மாட்டோன் என்று கூறினேன். ஆனால் பணம் செலுத்தவில்லை என்றால் உங்களின் மனைவிக்கு சிகிச்சை அளிக்கமாட்டோம் என்று மருத்துவமனை நிர்வாகம் என்னை மிரட்டியது. ஏற்கனவே சிகிச்சைக்காக நான் ரூ.2.5 லட்சம் பணத்தை செலவலித்து விட்டேன். மேலும் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கும் கடிதம் எழுதியிருக்கிறேன். இருப்பினும் தற்போது வரை எவ்வித நடவடிக்கையையும் எடுக்கவில்லை என்று கூறியுள்ளார். மேலும் அலட்சியம் காரணமாக மருத்துவமனையின் நிர்வாகத்தின் மீது நோயாளியின் உறவினர்கள் வழக்குப்பதிவு செய்துள்ளனர்

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்