அர்ஜூன் நடித்த காட்சியில் வருவது போல அபிஷேகம் செய்த தெலுங்கானா ராஷ்டிர சமிதி தொண்டர்கள்..!
தெலுங்கானா ராஷ்டிர சமிதி தொண்டர்கள் தெலுங்கானா மாநில சட்டப்பேரவை சபாநாயகர் ஸ்ரீகோண்டா மதுசூதன் சாரிக்கு பால் அபிஷேகம் செய்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர்.
தெலுங்கானா மாநிலத்தின் பூபாலாபெல்லி மாவட்டத்தில் உள்ள ஆரோபெல்லி கிராமத்தில், புதிதாக அமைக்கப்பட்ட கிராமப் பஞ்சாயத்து அலுவலகத்தை, அம்மாநில சட்டப்பேரவை சபாநாயகர் ஸ்ரீகோண்டா மதுசூதன் சாரி திறந்துவைத்தார்.
நிகழ்ச்சிக்கு வந்த அவருக்கு உற்சாக வரவேற்பு கொடுத்த சந்திரசேகர ராவின் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி தொண்டர்கள் அவரை அமரவைத்து முதல்வன் படத்தில் அர்ஜூனுக்கு பால் அபிஷேகம் செய்வது போல் பால் அபிஷேகம் செய்து தங்களின் அதீத அபிமானத்தை வெளிப்படுத்தினர்.
இருப்பினும் இந்த விவகாரத்தை கையிலெடுத்துள்ள நெட்டிசன்கள் அபிஷேகம் என்ற பெயரில் பாலை வீணாக்கியதை கண்டித்து பதிவிட்டு வருகின்றனர்.
ஏழை மக்களுக்கு இந்த பாலை கொடுத்திருந்தால் பயனுள்ளதாக இருந்திருக்கும் என்றும் வலைத்தளங்களில் கருத்துகள் பகிரப்படுகின்றன.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.