அரசு முறைப் பயணமாக கிரீஸ் நாட்டுக்கு சென்றுள்ளார் : குடியரசுத் தலைவர்..!
அரசு முறைப் பயணமாக கிரீஸ் நாட்டுக்கு சென்றுள்ள குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு ஏதென்ஸ் நகரில் வரவேற்பு அளிக்கப்பட்டது. கிரீஸ் அதிபர் ப்ரோகோபிஸ் பவ்லோ பவுல்ஸ் ((Prokopis Pavlopoulos)) குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு இரவு விருந்தளித்து கவுரவித்தார்.
இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவதற்கான பேச்சுவார்த்தையும் நடைபெற்றது.
ஏதென்ஸில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், ஐநாவில் இந்தியா நிரந்தர உறுப்பினராவதற்கு, கிரீஸ் தொடர்ந்து ஆதரவளித்து வருவதைக் குறிப்பிட்டு நன்றி தெரிவித்தார்.
உலக அமைதி மற்றும் பாதுகாப்புக்கு இருநாடுகளும் இணைந்து பாடுபட உறுதி பூண்டிருப்பதாகவும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கூறினார்.