Categories: இந்தியா

அரசு பணிகளில் பதவி உயர்வில் எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கு இட ஒதுக்கீடு !உச்சநீதிமன்றம் உத்தரவு..!

Published by
Dinasuvadu desk

அரசு பணிகளில் பதவி உயர்வில் எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கு இட ஒதுக்கீடு வழங்க மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.

எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு மத்திய அரசு பணிகளில் பதவி உயர்வில் இடஒதுக்கீடு வழங்குவது குறித்து ராஜ்நாத் சிங் தலைமையில்  அமைச்சர்கள் குழு ஆலோசனை செய்து வந்தது. இதற்காக தொடர்ந்து குரல் கொடுத்து வந்த மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான்,  இது தொடர்பாக மத்திய அரசு கண்டிப்பாக நீதிமன்றத்தை அணுகும் என உறுதி அளித்திருந்தார்.

மேலும் இதற்கு முன்னரே, வன்கொடுமை தடுப்பு சட்டம், அரசுப்பணியில் பதவி உயர்வில் எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு இட ஒதுக்கீடு, பல்கலைக்கழகங்களில் இட ஒதுக்கீடு ஆகிய 3 விஷயங்களில் எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு பாதகமாக உச்ச நீதிமன்றம் கடந்த ஜனவரி மாதம் தீர்ப்பு அளித்திருந்தது. இதற்கு எதிராக நாடு முழுவதும் எஸ்சி, எஸ்டி வகுப்பினர் போராட்டம் நடத்தி வந்தனர். அதனால் இதுபற்றி ஆராய மத்திய அமைச்சர்கள் அடங்கிய, அரசியல் சாசன அமர்வு குழு ஒன்று அமைக்கப்பட்டது.

இந்நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அதில்  எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு இட ஒதுக்கீடு வழங்கலாம் என மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவிட்டது. மேலும் அரசியல் சாசன அமர்வில் விசாரணை முடியும் வரை சட்டத்திற்குட்பட்டு, ஏற்கனவே உள்ள நடைமுறைபடி இடஒதுக்கீடு வழங்கலாம் என கூறி உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

Recent Posts

“2026 தேர்தல் முக்கியம்., ரிப்போர்ட் கார்டு வேண்டும்!” மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்! 

“2026 தேர்தல் முக்கியம்., ரிப்போர்ட் கார்டு வேண்டும்!” மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்!

சென்னை : இன்று (நவம்பர் 22) சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக…

5 hours ago

கூகுள் குரோம் பயனர்களே உஷார்! எச்சரித்த மத்திய அரசு!

டெல்லி : உலகளவில் பெரும்பாலான ஸ்மார்ட் போன் பயன்பாட்டாளர்களின் இணையவழி தேடல் எஞ்சினாக செயல்பட்டு வருகிறது கூகுள் குரோம். இந்த…

6 hours ago

மாணவர்களை கால் அழுத்திவிட கூறிய ஆசிரியர்! சஸ்பெண்ட் செய்த கல்வி அதிகாரி!

சேலம் : பள்ளி மாணவர்களை பள்ளிகளில் வேலை வாங்கும் நிகழ்வுக்கு அவ்வபோது உயர் கல்வி அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும்,…

7 hours ago

நாளை தவெக தலைவர் விஜய் வைக்கும் விருந்து! யார் யாருக்கு தெரியுமா?

சென்னை : கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகம்…

8 hours ago

“மீனவர்கள் ஆழ்கடலுக்குச் செல்ல வேண்டாம்” – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…

8 hours ago

அதானி குழுமத்திற்கு எதிராக ஆஸ்திரேலியாவில் ‘இனவெறி’ புகார்!

ஆஸ்திரேலியா : அதானி குழுமத்திற்கு இந்த வாரம் அடிமேல் அடியாக விழுந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே அமெரிக்க வழக்கறிஞர்கள் அளித்த லஞ்ச…

8 hours ago