அரசு நிலத்தை குறைந்த விலைக்கு வாங்கியதாக சோனியா காந்தியின் மருமகன் மீது புகார்
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேராவின் அலுவலகங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.
காங்கிரஸ் ஆட்சி காலத்தில் ராஜஸ்தான் மற்றும் அரியானாவில் அரசு நிலத்தை குறைந்த விலைக்கு வாங்கியதாக பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட்வாத்ரா மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பான வழக்குகள் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளது.
இந்நிலையில், டெல்லி மற்றும் பெங்களூரில் உள்ள ராபர்ட் வதேதராவுக்கு சொந்தமான அலுவலகங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனை தொடர்பாக எவ்வித முன் அறிவிப்பும் செய்யப்படவில்லை என்று ராபர்ட் வதேராவின் வழக்கறிஞர் குற்றம்சாட்டியுள்ளார்