தேர்தல் ஆணையம்,தேர்தல் நேரத்தில் அமல்படுத்தப்படும் நடத்தை விதிமுறையால் அரசு நிர்வாகம் ஸ்தம்பித்து விடுவதாக மத்திய சட்ட ஆணையம் கூறிய கருத்தை நிராகரித்துள்ளது.
மக்களவை, சட்டப்பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் திட்டம் பற்றி தேர்தல் ஆணைய அதிகாரிகளும், மத்திய சட்ட ஆணைய அதிகாரிகளும் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் அண்மையில் டெல்லியில் நடைபெற்றுள்ளது. அதில், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்படும்போது மக்கள் பாதிக்கப்படுவதாகவும், இதனை மறுபரிசீலனை செய்ய வேண்டும் மத்திய சட்ட ஆணைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதனை ஆரம்ப நிலையிலேயே நிராகரித்துவிட்ட தேர்தல் ஆணைய அதிகாரிகள், ஆளும் கட்சியால், அரசு நிர்வாகம் துஷ்பிரயோகம் செய்யப்படுவதை தடுக்கவே, தேர்தல் நடத்தை விதிமுறை அமல்படுத்தப்படுவதாக கூறியுள்ளனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.