அரசு திட்டங்களுக்கு தெருக்கள் முதல் நாடாளுமன்றம் வரை எதிர்க்கட்சிகள் தடை போடுகின்றன : பிரதமர் மோடி
பிரதமர் நரேந்திரமோடி தெருக்கள் முதல் நாடாளுமன்றம் வரை அரசு திட்டங்களுக்கு எதிர்க்கட்சிகள் தடை போடுவதாக குற்றம்சாட்டியுள்ளார்.
பீகார் மாநிலம் மோதிஹரி (motihari) பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர், 6 ஆயிரத்து 600 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர், ஊழல், சமூக விரோத சக்திகளுக்கு எதிராக நிதிஷ்குமார் அரசு திறம்பட செயல்படுவதாக பாராட்டு தெரிவித்தார்.
பீகாரில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் எட்டரை லட்சத்திற்கும் அதிகமான கழிவறைகள் கட்டுப்பட்டுள்ளன என்று குறிப்பிட்ட பிரதமர், இது மிகப்பெரிய சாதனை என்றும் தெரிவித்தார். மக்களை ஒருங்கிணைக்கும் செயலில் அரசு ஈடுபடும் போது, சில எதிர்க்கட்சிகள் சமூக கட்டமைப்பை உடைக்கும் பணியில் ஈடுபடுவதாக மோடி குறை கூறினார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.