6 மாதங்களில் விவகாரத்து கோரி வழக்கு தொடர்ந்துள்ள லாலு மகன் தேஜ்பிரதாப் யாதவ், அரசியல் லாபத்திற்காக ‘விருப்பத்துக்கு மாறான திருமணம்’ என்று கூறியுள்ளார்.
என்னுடைய குடும்பத்தில் உள்ளவர்கள் மற்றும் ராஷ்டீரிய ஜனதா தளம் கட்சியின் அரசியல் லாபத்திற்காக நான் பலிகடா ஆக்கப்பட்டேன் என்று விவகாரத்து கோரியுள்ள லாலு பிரசாத் யாதவ் மகன் தேஜ்பிரதாப் யாதவ் கூறியுள்ளார்.
ராஷ்ட்ரீய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத்தின் மகன் தேஜ்பிரதாப் யாதவுக்கும், பீகார் எம்எல்ஏ சந்திரிகா ராயின் மகள் ஐஸ்வர்யா ராய்க்கும் கடந்த மே மாதம் திருமணம் நடைபெற்றது. பீகார் தலைநகர் பாட்னாவில் அமைந்துள்ள கால்நடை மருத்துவக் கல்லூரி மைதானத்தில் திருமணம் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்நிலையில் திருமணங்கள் ஆகி 6 மாதங்கள் ஆன நிலையில் விவகாரத்து கோரி மகன் தேஜ்பிரதாப் யாதவ் வழக்கு தொடர்ந்துள்ளார். இதுதொடர்பான விசாரணையை நவம்பர் 29 தேதி பாட்னா குடும்பநல கோர்ட்டு விசாரிக்கிறது. ஊழல் வழக்கில் லாலு பிரசாத் யாதவ் சிறையில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தேஜ்பிரதாப் யாதவ் முடிவு அவருடைய குடும்பத்தார் மற்றும் நண்பர்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
இந்நிலையில் விவகாரத்து செய்து கொள்ளும் தேஜ்பிரதாப் யாதவ் பேசுகையில் அரசியல் லாபத்திற்காக ‘விருப்பத்துக்கு மாறான திருமணம்’ என்று கூறியுள்ளார்.
ராஞ்சியில் உள்ள லாலுவை சந்திக்க செல்லும் போது கயாவில் பேசிய தேஜ்பிரதாப் யாதவ், என்னுடைய குடும்பத்தில் உள்ளவர்கள் மற்றும் ராஷ்டீரிய ஜனதா தளம் கட்சியின் அரசியல் லாபத்திற்காக நான் பலிகடா ஆக்கப்பட்டேன். எங்கள் இருவருக்கும் எந்த ஒரு பொறுத்தமும் கிடையாது. நாங்கள் இருவரும் வெவ்வேறு மாறுபட்ட பின்னணியை கொண்டவர்கள். நான் திருமணத்திற்கு தயாராக இருந்தது கிடையாது. என்னுடைய பெற்றோர்களிடம் கெஞ்சினேன். என்னுடைய சகோதரன் மற்றும் சகோதரிகளிடம் ஆலோசனையை மேற்கொண்டேன், அவர்கள் யாரும் அதனை முக்கியத்துவமாக எடுத்துக்கொள்ளவில்லை. என்னுடைய விவகாரத்து முடிவிலிருந்து பின்வாங்கப்போது கிடையாது. அம்பு பாய்ந்துவிட்டது. பிரதம மந்திரி தலையிட்டாலும் கூட இனி என்னை இணங்கசெய்ய வைக்க முடியாது,” என கூறியுள்ளார்.
dinasuvadu.com