Categories: இந்தியா

அமைச்சர் பதவியுடன் 100 கோடி ரூபாய் தருவதாக பேரம் பேசுகிறது பாரதிய ஜனதா கட்சி !குமாராசாமி குற்றச்சாட்டு

Published by
Venu

மதச்சார்பற்ற ஜனதா தள எம்எல்ஏ.க்களுக்கு  100 கோடி ரூபாய், அமைச்சர் பதவி என பாஜக பேரம் பேசுவதாக குமாரசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் மதச்சார்பற்ற ஜனதா தளமும், பகுஜன் சமாஜ் கட்சியும் இணைந்து போட்டியிட்டு 38 தொகுதிகளில் வெற்றிபெற்றுள்ளன. பாஜக ஆட்சியமைப்பதை தடுக்கும் நோக்கில், 78 தொகுதிகளில் வெற்றிபெற்ற காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆட்சியமைக்க ஆதரவு தெரிவித்தது. தேர்தலுக்கு பிந்தைய இந்த புதிய கூட்டணிக்கு பெரும்பான்மை பலத்திற்கும் கூடுதலாக எம்எல்ஏ.க்கள் இருப்பதாலும், முதலமைச்சர் வேட்பாளராக தாம் முன்னிறுத்தப்படுவதாலும் குமாரசாமி ஆட்சியமைக்கும் முனைப்பில் உள்ளார்.

இந்நிலையில், பெங்களூரில் நட்சத்திர ஹோட்டலில் மதச்சார்பற்ற ஜனதா தள எம்எல்ஏ.க்களின் கூட்டம் குமாரசாமி தலைமையில் நடைபெற்றது. இதில் மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் சட்டமன்ற குழு தலைவராக குமாரசாமி தேர்வு செய்யப்பட்டார்.

இந்த கூட்டத்தில் ராஜா வேங்கடப்பா நாயக்கா ((Raja Venkatappa Nayaka)), வெங்கட்ட ராவ் நடகவுடா ((Venkata Rao Nadagouda)) ஆகிய இரு எம்எல்ஏ.க்கள் பங்கேற்கவில்லை. அவர்கள் எங்கிருக்கிறார்கள் என்று தெரியவில்லை எனவும், மதச்சார்பற்ற ஜனதா தள தலைமையால் அவர்களை தொடர்புகொள்ள முடியவில்லை எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. எம்எல்ஏ.க்கள் கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய குமாரசாமி, எந்த விலை கொடுத்தாவது ஆட்சியைக் கைப்பற்றிவிட வேண்டும் என்ற அவசரத்தில் பாஜக செயல்படுவதாக கூறினார்.

மதச்சார்பற்ற ஜனதா தள எம்எல்ஏ.க்களுக்கு அமைச்சர் பதவி தருவதாக ஆசை காட்டப்படுவதாகவும், 100 கோடி ரூபாய் வரை பேரம் பேசப்படுவதாகவும் அவர் குற்றம்சாட்டினார். ((பாஜக எம்எல்ஏ.க்கள் சிலர் அங்கிருந்து விலகி தங்களுடன் இணைய தயாராக இருப்பதாக கூறிய குமாரசாமி, தங்களிடமிருந்து ஒரு எம்எல்ஏ-வை பாஜக இழுத்தால், அதே வேலையை தாங்களும் செய்து பாஜக-விடமிருந்து 2 எம்எல்ஏ.க்களை இழுப்போம் என எச்சரித்தார். குதிரை பேரத்தை ஊக்குவிக்கும் எந்தவொரு முடிவையும் எடுக்க வேண்டாம் எனவும் ஆளுநரை அவர் கேட்டுக்கொண்டார்.))

மதச்சார்பற்ற வாக்குகள் பிரிந்ததாலேயே பாஜகவிற்கு 104 தொகுதிகள் கிடைத்ததாகவும் குமாரசாமி குறிப்பிட்டார். மேகாலயா, மணிப்பூர், கோவாவில் ஆட்சிகளைப் பறித்துக்கொண்ட பாஜக, தற்போது கர்நாடகத்தில் மத்திய அரசின் அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்துவதாகவும் அவர் குறை கூறினார். மதச்சார்பற்ற ஜனதா தளத்திற்கு நிபந்தனையற்ற ஆதரவு அளிக்கும் காங்கிரசுக்கு நன்றி தெரிவித்த குமாரசாமி, பாஜகவுடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை எனவும் விளக்கம் அளித்தார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Recent Posts

முதல் சதம் அடித்த நிதிஷ் குமார் ரெட்டி! அசத்தல் பரிசுதொகை அறிவித்த ஆந்திர கிரிக்கெட் வாரியம்!

முதல் சதம் அடித்த நிதிஷ் குமார் ரெட்டி! அசத்தல் பரிசுதொகை அறிவித்த ஆந்திர கிரிக்கெட் வாரியம்!

மெல்போர்ன் : ஆஸ்ரேலியாவுக்கு எதிரான இந்த 4-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் முக்கிய வீரர்களான ரோகித் சர்மா (3),…

6 hours ago

கனமழையை தொடர்ந்து குளிர்! டெல்லி மக்களை வாட்டி வதைக்கும் வானிலை!

டெல்லி : மாநிலத்தில் பல பகுதிகளில் கனமழை பெய்த காரணத்தால் சில இடங்களில் வெள்ளம் ஏற்பட்டது. குறிப்பாக டெல்லி என்சிஆர்…

7 hours ago

ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை…பொங்கல் பரிசு தொகுப்பை அறிவித்த தமிழக அரசு!

சென்னை : அடுத்த ஆண்டு (2025) ஜனவரி 14ம் தேதி (செவ்வாய்க்கிழமை) பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. இதனையடுத்து, தமிழர் திருநாளாம்…

8 hours ago

“அண்ணா பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பை மேம்படுத்த வேண்டும் ”.. ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவு!

சென்னை : சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை  சம்பவம் தமிழகத்தை உலுக்கியுள்ளது.  மாணவி கொடுத்த புகாரின்…

8 hours ago

வன்கொடுமை விவகாரம் : FIR லீக்கான காரணம் இது தான்..அமைச்சர் ரகுபதி விளக்கம்!

சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில்  மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ள நிலையில், இந்த…

9 hours ago

ராமதாஸ் உடன் பாமக நிர்வாகிகள் ஆலோசனை! அன்புமணியை சமாதானம் செய்ய முடிவு?

சென்னை : பாமக பொதுக்குழு அந்த கூட்டத்தில்  இளைஞரணி தலைவர் நியமனம் செய்யப்படுவது தொடர்பாக ராமதாஸ்- அன்புமணி இடையே வார்த்தை மோதல்…

9 hours ago