Categories: இந்தியா

அமேசான் பார்சலில் சோப்புக் கட்டி…அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்…!!

Published by
Dinasuvadu desk

ஆர்டர் செய்தது செல்போன். பார்சலில் வந்தது சோப்புக் கட்டி. இணையவழி வர்த்தக நிறுவன அதிகாரி உள்பட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் நொய்டா நகரைச் சேர்ந்த வாடிக்கையாளர் ஒருவர் அமேசான் இணைய வழி வர்த்தக நிறுவனத்திடம் குறிப்பிட்ட ரக செல்போன் கேட்டு கடந்த 23-ந்தேதி ஆர்டர் செய்தார். அடுத்த 4 நாட்கள் கழித்து சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் வழியாக அவருக்கு ஒரு பார்சல் வந்தது.
அதை பிரித்துப் பார்த்தவருக்கு பெருத்த அதிர்ச்சி காத்திருந்தது. ஏனென்றால் அவர் பணம் கட்டி கேட்டிருந்த செல்போனுக்கு பதிலாக அந்த பார்சலுக்குள் சோப்புக் கட்டி ஒன்று இருந்தது. இதுபற்றி அந்த வாடிக்கையாளர், அருகில் உள்ள பிஸ்ரா போலீஸ் நிலையத்தில் அமேசான் இந்தியா நிறுவனத்தின் தலைமை அதிகாரி அமித் அகர்வால், தர்ஷிதா லாஜிஸ்டிக்ஸ் நிறுவன இயக்குனர்கள் பிரதீப் குமார், ரவிஸ் அகர்வால் மற்றும் பார்சலை கொண்டு வந்த அனில் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கும்படி கோரி புகார் அளித்தார்.
அதன் அடிப்படையில் 4 பேர் மீதும் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இச்சம்பவத்தை உறுதி செய்த அமேசான் இந்தியா நிறுவனம் பாதிக்கப்பட்டவருக்கு பணத்தை திருப்பி அளிக்க சம்மதம் தெரிவித்து உள்ளது. மேலும், இதுபற்றி அந்த நிறுவனம் கூறுகையில், “இதுபோன்ற மோசடிகளை நாங்கள் தீவிரமாக கவனத்தில் எடுத்துக் கொள்கிறோம். இந்த விவகாரத்தில் போலீசுக்கு முழு ஒத்துழைப்பு அளிப்போம்” என்று தெரிவித்து உள்ளது.
dinasuvadu.com 

Published by
Dinasuvadu desk

Recent Posts

இலங்கையின் புதிய பிரதமராக ஹரிணி அமரசூரிய நியமனம்.!

இலங்கையின் புதிய பிரதமராக ஹரிணி அமரசூரிய நியமனம்.!

இலங்கை : இலங்கை அதிபர் தேர்தலில் இடதுசாரி கட்சி தலைவர் அநுர குமார திசாநாயக்க வெற்றி பெற்றார். இதையடுத்து, பிரதமராக இருந்த…

31 mins ago

செஸ் ஒலிம்பியாட் : “கூட்டு முயற்சிக்கு கிடைத்த வெற்றி”! கிராண்ட்மாஸ்டர் குகேஷ் பேச்சு!

சென்னை : ஹங்கேரி நாட்டின் தலைநகரான புடாபெஸ்ட்டில் 45-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியானது நடைபெற்று முடிந்தது. இந்த தொடரின் இறுதிச்…

44 mins ago

“அந்த படத்துக்கு பதிலா கொட்டுக்காளி, ஆடுஜீவிதம் படங்களை ஆஸ்காருக்கு அனுப்பியிருக்கலாம்”…வசந்த பாலன் கருத்து!

சென்னை : சினிமா உலகில் மிக உயரிய விருதாக கருதப்படும் விருது என்றால் அது "ஆஸ்கர் விருது" தான். இந்த…

1 hour ago

“24 மணி நேரமும் திரைப்படங்கள் திரையிட அனுமதி.,” தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை.!

சென்னை : தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் அவசர கூட்டம் இன்று காலை 11 மணியளவில் டாக்டர் மல்லிகை தெருவில்…

2 hours ago

லட்டு விவகாரம்., பவன் கல்யாணிடம் மன்னிப்புக் கேட்ட ‘மெய்யழகன்’ கார்த்தி.!

சென்னை : கார்த்தி, அரவிந்த் சாமி நடித்து, '96' பட இயக்குனர் பிரேம்குமார் இயக்கத்தில் இந்த வாரம் ரிலீசாக உள்ள…

3 hours ago

மக்களே! தமிழகத்தில் (25.09.2024) புதன்கிழமை இங்கெல்லாம் மின்தடை!

சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 25.09.2024) அதாவது , புதன்கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின் சில…

3 hours ago