அமெரிக்கா வரவேற்ப்பு! இந்திய பிரதமர் நரேந்திர மோடி – சீன அதிபர் ஜி ஜின்பிங் சந்திப்பு!
அமெரிக்கா,இந்திய பிரதமர் மோடி – சீன அதிபர் ஜி ஜின்பிங் சந்திப்பு, இரு நாட்டு பிரச்சினைகளை தீர்க்க, நேர்மையாக பேச்சு தொடங்குவதற்கான வாய்ப்பு என்று நம்பிக்கை தெரிவித்துள்ளது.
சீனா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, அதிகாரபூர்வமற்ற முறையில், அந்நாட்டு அதிபர் ஜி ஜின்பிங்கை சந்திக்கவுள்ளார். இதை வரவேற்றுள்ள, ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க ஆலோசகர் Bonnie S Glaser, நேர்மையான முறையில் பேச்சு தொடங்க, இது நல்ல வாய்ப்பு என்றார். அணு சக்தி வினியோக நாடுகள் குழுவில் இந்தியாவை சேர்க்க, சீனா அனுமதிக்கக்கூடும் என்று தெரிவித்த அவர், அதேபோல் சீனாவின் ஆசிய-பசுபிக் நாடுகள் சாலை திட்டத்தில் இந்தியாவில் அணுகுமுறைய மாற்ற வாய்ப்புள்ளது என்றார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.