அமெரிக்க பயணம் நிறைவு செய்த பிரதமர் மோடி; டெல்லியில் உற்சாக வரவேற்பு ..!

Default Image

பிரதமர் நரேந்திர மோடி தனது அமெரிக்க பயணத்தை முடித்துக்கொண்டு டெல்லி விமான நிலையம் வந்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்க பயணம் மேற்கொண்டு ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சிலின் 76 வது அமர்வில் உரையாற்றினார்.அதற்கு முன்னதாக குவாட் உச்சிமாநாட்டில் கலந்து கொண்டார் மற்றும் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன், அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் மற்றும் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த  ஸ்காட் மோரிசன் உள்ளிட்டவர்களிடம் இருதரப்பு மற்றும் பலதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தினார்.

இந்நிலையில்,பிரதமர் நரேந்திர மோடி தனது அமெரிக்க பயணத்தை முடித்துக்கொண்டு தற்போது டெல்லி விமான நிலையம் வந்துள்ளார். அமெரிக்காவிலிருந்து திரும்பிய பிறகு,பலாம் தொழில்நுட்ப விமான நிலையம் அருகே காத்திருந்த ஆதரவாளர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார்.


இதனையடுத்து,பிஜேபி தலைவர் ஜேபி நட்டா மற்றும் பிற தலைவர்கள் அமெரிக்காவிலிருந்து வருகை தந்த பிரதமர் நரேந்திர மோடியை வாழ்த்தி,மாலையிட்டு உற்சாக வரவேற்பு அளித்தனர்.இதனைத்தொடர்ந்து , ஜேபி நட்டா கூறுகையில்:”பிரதமர் மோடியின் 5 நாள் அமெரிக்கப் பயணமானது, உலகத்தின் பார்வையில் பிரதமர் மோடியின் தலைமையில் இந்தியா வித்தியாசமாக உள்ளது என்பதை நிரூபிக்கிறது. இதற்காக கோடிக்கணக்கான இந்தியர்கள் சார்பாக, நாங்கள் அவரை மீண்டும் வரவேற்கிறோம்.

பயங்கரவாதம், பருவநிலை மாற்றம் மற்றும் அனைவரின் பங்கேற்புடன் ஒரு தீர்வை எவ்வாறு கொண்டு வருவது என்பது பற்றிய விவாதத்துடன் இந்தியாவை உலகளாவிய வீரராக பிரதமர் மோடி நிறுவினார்.

அமெரிக்க அதிபர் ஜோ பிடனுடன் பிரதமர் மோடியின் நட்பு புதிதல்ல, அவர்கள் பழைய பிணைப்பைப் பகிர்ந்து கொள்கிறார்கள். இதை அமெரிக்க ஜனாதிபதியும் வலியுறுத்தினார்”,என்று தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா ஒப்படைத்த 157 கலைப்பொருட்களை பிரதமர் மோடி,இந்தியாவிற்கு கொண்டு வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்