அமெரிக்காவின் உளவு நிறுவனமான சிஐஏ எச்சரிக்கை! ஸ்வஹிந்து பரிஷத், பஜ்ரங்தள் ஆகியவை தீவிரவாத அமைப்பு!
அமெரிக்காவின் உளவு நிறுவனமான சிஐஏ ,விஸ்வஹிந்து பரிஷத், பஜ்ரங்தள் ஆகியவற்றை மத தீவிரவாத அமைப்புகள் பட்டியலில் சேர்த்துள்ளது.
ஆர்எஸ்எஸ் இயக்கத்தை தேசியவாத அமைப்பாகவும் சிஐஏ அடையாளப்படுத்தி உள்ளது. சர்வதேச அளவிலான தீவிரவாத மற்றும் பயங்கரவாத இயக்கங்களின் பட்டியலை வெளியிட்டுள்ள அமெரிக்க உளவு அமைப்பு, இந்தியாவில் செயல்படும் ஆர்எஸ்எஸ், விஸ்வ ஹிந்து பரிஷத், பஜ்ரங்தள் ஆகியவற்றை அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்த கூடிய இயக்கங்கள் பட்டியலிலும் சேர்த்துள்ளது.
ஹூரியத் இயக்கத்தை பிரிவினைவாத அமைப்பாகவும், மதானி தலைமையிலான ஜமியாத் உலமா ஹிந்த் ( Jamiat Ulema-Hind) அமைப்பை மத தீவிரவாத அமைப்பாகவும் சிஐஏ பட்டியலிட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.