அமெரிக்கத் தூதர் நிக்கி ஹாலே பிரதமர் நரேந்திர மோடி, சுஷ்மா ஸ்வராஜை சந்தித்தார்!
டெல்லியில் பிரதமர் நரேந்திரமோடியை 3 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள ஐ.நாவுக்கான அமெரிக்கத் தூதர் நிக்கி ஹாலே, சந்தித்துப் பேசினார்.
அப்போது இரு நாட்டு உறவை வலுப்படுத்துவது, தீவிரவாத எதிர்ப்பு உள்ளிட்டவை தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது. உலக அமைதிக்கு முக்கியம் என்பதால் இந்தியா – அமெரிக்கா இடையிலான நட்புறவு தொடர வேண்டும் என்றும் இருதரப்பிலும் நம்பிக்கை தெரிவிக்கப்பட்டது.
ஈரானில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை இந்தியா கைவிட வேண்டும் என்றும் பிரதமரிடம் நிக்கி ஹாலே வலியுறுத்தினார். முன்னதாக வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜையும் சந்தித்து நிக்கி ஹாலோ ஆலோசனை நடத்தினார்.