அமிர்தசரஸ் ரயில் விபத்து வீடியோ..!!

Default Image

அமிர்தசரஸில் உள்ள சவுரா பஜார் பகுதியில் உள்ள ஜோதா பதக் எனும் இடத்தில் ராவணன் உருவபொம்மைதகன நிகழ்ச்சி இன்று மாலை நடந்தது. அப்போது, ராவணன் உருவபொம்மை எரிக்கும் நிகழ்வு நடக்கும் இடத்துக்கு அருகே ரயில்வே தண்டவாளம் செல்கிறது.
இதனால், ராவணன் பொம்மை எரிப்பு நிகழ்ச்சியைப் பார்ப்பதற்காக ஏராளமான மக்கள் கூடி இருந்தனர். அப்போது, ரயில் தண்டவாளத்தை மறித்து ஏராளமான மக்கள் நின்றிருந்தனர். ராவணன் பொம்மை எரிக்கப்பட்டபோது, பட்டாசு வெடிக்கப்பட்டது.அப்போது ஜலந்தரில் இருந்து அமிர்தசரஸ் நோக்கி ரயில் ஒன்று வேகமாக வந்தது, பட்டாசு வெடிக்கும் சத்தத்தில் தண்டவாளத்தில் ரயில் வரும் சத்தமும், ரயிலையும் மக்கள் கவனிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. வேகமாக வந்த ரயில், தண்டவாளத்தில் நின்றிருந்த மக்கள் மீது கண்ணிமைக்கும் வேகத்தில் மோதிவிட்டுச் சென்றது.
DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்