அமித் ஷா இந்துவா?இல்ல வேற மதமா?பாஜக – காங்கிரஸ் இடையே தொடங்கியது வார்தைப்போர் !
பாஜக – காங்கிரஸ் இடையே, பாரதியஜனதா தேசியத் தலைவர் அமித் ஷா இந்து மதத்தைச் சேர்ந்தவரா, இல்லையா என்பது குறித்து வார்த்தைப் போர் மூண்டுள்ளது. கர்நாடகா தேர்தல் பிரச்சாரத்தின் போது பேசிய சித்தராமய்யா, அமித் ஷா ஓர் இந்துவல்ல என்றும், அவர் ஜெயின் மதத்தைச் சேர்ந்தவர் எனவும் கூறினார்.
அமித் ஷா தான் ஜெயின் மதத்தைச் சேர்ந்தவரல்ல, இந்து என தைரியமிருந்தால் கூறட்டும் என்றும் சித்தராமய்யா சவால் விடுத்திருந்தார். இதற்கு பாஜக தரப்பில் பதிலளித்துள்ள மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், அமித் ஷா சனாதன இந்து மதத்தைச் சேர்ந்தவர் என்றும், தேர்தலுக்காக காங்கிரஸ் மலிவான பிரச்சாரத்தில் ஈடுபடுவதாகவும் கூறியுள்ளார்.
மேலும், அமித் ஷா ஜெயின் மதத்தைச் சேர்ந்தவர் என்ற நினைத்துப் பார்க்கவே முடியாத கருத்தைக் காங்கிரஸ் கூறுவதாகவும் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.