அமித்ஷாவை விசாரித்த நீதிபதி மரணத்தில் மர்மம்??

Default Image

மூன்றாண்டுகளுக்கு முன்(2014) பா.ஜ.க. தலைவர் அமித்ஷா குற்றம் சாட்டப்பட்ட சிராபுதீான் கவுசர் பீ போலி என்கவுன்டர் வழக்கின் நீதிபதி இறந்தது குறித்து அவரது குடும்பத்தினர் சந்தேகங்களை எழுப்பியுள்ளனர்.
சிராபுதீன் மற்றும் கவுசர் பீ ஆகியோரை திட்டமிட்டு குஜராத் காவல்துறை கொலை செய்தது என்று சிபிஐ வழக்கு தொடர்ந்தது.
இதில் 11 காவல்துறை அதிகாரிகளுடன் அன்றைய குஜராத் உள்துறை அமைச்சர் அமித்ஷா முக்கிய குற்றவாளி. ஆகவே, வழக்கை உச்சநீதிமன்றம் மகராஷ்ட்ரா நாக்பூருக்கு மாற்றியது
இந்த வழக்கை முதலில் விசாரித்த நீதபதி உத்பத் (ஜூன் 6) அமித்ஷா தொடர்ந்து நீதிமன்றத்திற்கு வராமல் இருப்பதற்கு கண்டனம் தெரிவித்து ஜூன் 26ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்திரவிட்டுள்ளார்.
அதற்க ஒரு நாள் முன்பு ஜூன் 25ஆம் தேதி அவர் பூனே நீதிமன்றத்திற்கு மாற்றப்படுகிறார். பிறகு பொறுப்பேற்ற நீதிபதி பிரிட்ஜ் கோபால் ஹரிசிங் லோயாவும் அமித்ஷா நீதிமன்றத்திற்கு வராமல் இருப்பதற்கு கண்டனம் தெரிவித்தார்.
நவம்பர் 30 ஆம் தேதி மற்றொரு நீதிபதி வீட்டு திருமண நிகழ்வுக்காக நாக்பூர் சென்ற நீதிபதி மாரடைப்பால் இறந்ததாகத் தகவல் நீதிபதியின் தந்தைக்கு டிசம்பர் 1ஆம் தேதி தெரிவிக்கப்பட்டது.
ஆனால், அவருடைய மரணத்தில் சந்தேகம் உள்ளதாக அவருடைய சகோதிரியும் மற்றொரு உறவினரும் தெரிவித்துள்ளனர். அவரது தந்தையும் இதே தகவலை தெரிவித்துள்ளார். காரவன் பத்திரிக்கை இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
அவர் மாரடைப்பால் இறந்தார் என்று தெரிவிக்கப்பட்டது,
அவருக்கு நெஞ்சுவலி வந்த போது அவரை ஒரு
ஆட்டோவில்தான் முதலில் ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றதாகவும், பின்னர் 2வது மருத்துவமனைஅவர் மரணமடைந்து கொண்டு வரப்பட்டார் என்று பதிவு செய்துள்ளது.
இயற்கையாக மரணமடைந்த அவரின் உடல் போஸ்ட் மார்ட்டம் செய்யப்பட்டது.
அவரின் சட்டை காலரில் இரத்தக் கறை இருந்ததாக அவரது சகோதிரியும், அவரது தந்தையும் தெரிவித்தனர்.
ஆனால், போஸ்ட் மார்ட்டம் ப்ற்றிய போலீஸ் (பஞ்ச்நாமா) குறிப்புகள் இல்லை.
அவரின் செல்போனில் கால் ஹிஸ்ட்ரி முழுவதும் அழிக்கப்பட்டிருந்தது.
அவரது போஸ்ட் மார்ட்டம் அறிக்கையில் அவரது சார்பில் அவரது தாய்மாமன் என்ற உறவு முறையில் ஒருவர் கையெழுத்திட்டிருந்தார்.
ஆனால், இறந்தவர்க்கு தாய் மாமனே கிடையாது. கையெழுத்திட்ட பெயரில் சொந்தங்கள் யாரும் கிடையாது.
அவருடைய உடலை அனுப்பியது, அவருடைய செல்போனை அளித்தது எல்லாம் நீதிபதிக்கும் அந்த குடும்பத்திற்கும் தொடர்பே இல்லாத ஈஸ்வர் பஹேத்தி என்ற ஆர்.எஸ்.எஸ். காரர்.
அந்த ஆர்.எஸ்.எஸ் காரரிடம் மறைந்த நீதிபதியின் உடல் மற்றும் செல்போன் எப்படி சென்றது என்ற தகவல் இல்லை.
ஆகவே அவரது மரணம் குறித்து அவரது உறவினர்கள் சந்தேகம் எழுப்பியுள்ளனர். ஆனால்ஈ அவரது மனைவியும் மகனும் பத்திரிக்கையுடன் பேச மறுத்துவிட்டனர்.
பின்கதை : நீதிபதி லேயேவுக்கு பதிலாக வந்த மாற்று நீதிபதி முதல் அமர்விலேயே அமித்ஷாவை விடுதலை செய்தார்.
அதன் பிறகு குற்றம் சாட்டப்பட்ட 11 காவல்துறையினரும் விடுவிக்கப்பட்டனர்.
இன்று நாட்டின் ஜனாதிபதி வரை தேர்வு செய்வது அமித்ஷாவின் கையில் என்பதால்,
சட்டத்தின் மாட்சிமையைக் கொண்டாடுவோம் மக்களே!

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்