அமர்நாத் புனித யாத்திரை ஜம்முவில் இருந்து தொடங்கியது!
இன்று அமர்நாத் குகை பனிலிங்கத்தை தரிசிப்பதற்கான புனித யாத்திரை கொடியசைத்து தொடங்கிவைக்கப்பட்டது.
ராணுவ வாகனங்கள் முன்னும் பின்னும் அணிவகுக்க பக்தர்கள் பல்டல் மற்றும் பாஹல்காம் அழைத்துச் செல்லப்படுகின்றனர். அதன் பிறகு அவர்கள் தனியாக பயணம் மேற்கொண்டு 3 ஆயிரத்து 880 அடி உயரத்தில் உள்ள பனிமலையின் மீது நடந்து சென்று வழிபாடு செய்வார்கள்.
காவல்துறை அதிகாரிகள், தீவிரவாதிகள் அச்சுறுத்தல் அதிகமாக உள்ள நிலையில் அனைத்து முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். இந்த ஆண்டு இரண்டு லட்சம் பேர் யாத்திரை செல்ல முன்பதிவு செய்துள்ளனர். இதனிடையே யாத்திரை செல்கின்றவர்கள் எங்கள் விருந்தினர்கள், அவர்கள் மீது தாக்குதல் நடத்த மாட்டோம் என ஹிஸ்புல் முஜாயிதீன் தீவிரவாத அமைப்பு அறிவித்துள்ளது.