சாதரணக் குழந்தைகள் போல் மாற்றுத்திறனாளி குழந்தைகளால் வளர்வது சற்று இயலாத சவலான ஒன்று. மேலும் அவர்களுக்கு கிடைக்கும் உதவி மற்றும் உடன் இருப்பவர்களின் ஒத்துழைப்பை நம்பி இருக்க வேண்டி உள்ளது.இவர்களுக்கு தாய்-தந்தையின் அரவணைப்பு மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு அவசியமான ஒன்று.
இதில் பெற்றோரின் பங்கு மிகவும் அளப் பெரியது. அதனை வெறும் வார்த்தையில் எழுத்தில் சொல்லமுடியாது.இவ்வுலகில் இவர்கள் எல்லாம் கடவுளின் குழந்தைகள் இவர்களை பேணி காப்பற்றி வளர்க்கக்கூடிய பெற்றோர்கள் தெய்வங்களுக்கு ஒருபடி மேல் என்றுதான் சொல்லவேண்டும்.
எத்தனை கஷ்டங்களை தாங்கி கொண்டு அக்குழந்தைகளை பாதுகாப்பாக வளர்க்கின்றனர். அவர்களின் வேதனை எல்லாம் தனக்கு பின் தன் பிள்ளையை பேணி யார் பார்ப்பார்கள் என்ற கேள்வி மனதில் ரனமாய் கிடந்து அவர்களை வாட்டி வதைக்கிறது.இவ்வாறு சவால் நிறைந்த வாழ்க்கையில் ஒரு அன்பு தந்தை தனது அன்பு மகளின் தீராத ஆசையை நிறைவேற்றி அனைவரின் கவனத்தையும் பாராட்டையும் பெற்று வருகிறார்.
மாற்றுத்திறனாளி பெண் ஒருவரை ஒரு நபர் தன் இருசக்கர வாகனத்தில் ராட்டினம் அமைக்கப்பட்டிருக்கும் இடத்திற்கு அழைத்து வந்து அந்த ராட்டினத்தில் ஆட வைக்க அதை நோக்கி தூக்கி வருகின்றார். மற்ற குழந்தைகள் மற்றும் அங்கு இருந்த பொதுமக்கள் ராட்டினத்தில் இருந்த படி இந்த நிகழ்வை பார்வை இடுகின்றனர்.
பெண்ணை தூக்கி வந்தவர் அந்த பெண்ணின் தந்தை எனவும் தனது மகள் ஆசைப்பட்ட ராட்டினத்தில் அவளை சுற்ற வைத்து அவள் முகத்தில் சந்தோஷத்தை ஏற்படுத்தி அதனை கண்டு ரசித்த அவரது செயல் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.மாற்றுத்திறனாளியான தன் மகளுக்கு வாழ்வில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் தந்தை என்று பலரும் இணையத்தில் விடியோவை தங்களது தனிப்பட்ட பக்கங்களில் பகிர்ந்து பாராட்டி வருகின்றனர்.
” தாயும்- தந்தையும் நிகரில்லை கடவுளுக்கு .,அதற்கும் மேல்…உண்மை தானே உறவுகளே..! “
தினச்சுவடு சார்பாக அனைத்து உறவுகளுக்கும் மாட்டுப்பொங்கல்- வள்ளுவர் தின நல்வாழ்த்துக்கள்….
சென்னை : 18-வது ஐபிஎல் சீசன் இந்த ஆண்டு வருகின்ற 22-ஆம் தேதி (சனிக்கிழமை) தொடங்கி வரும் மே 25-ஆம்…
சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி - சட்டப் பேரவை உறுப்பினர் செங்கோட்டையன் இடையே அதிருப்தி நிலவுவதாக சமூக…
டெல்லி : ஐபிஎல் 2025 சீசன் இன்னும் ஒரு வாரத்திற்குள் தொடங்கவுள்ள நிலையில், வரப்போகும் இரண்டு மாத கால கிரிக்கெட்…
சென்னை : 2025 - 2026 ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை அத்துறையின் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்து, பல்வேறு புதிய…
வாஷிங்டன் : அமெரிக்க விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் ஜூன் மாதம் முதல் சர்வதேச…
சென்னை : தமிழ்நாட்டில் புதிய தேசிய கல்விக்கொள்கை வழியாக மத்திய அரசு இந்தியை திணிக்க முயற்சிப்பதாக தொடர்ந்து திமுக அரசு…